search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்"

    விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து புதிதாக பாதிப்பு விவரங்கள் வந்து கொண்டிருப்பதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
    சென்னை:

    அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய குழு நாளை வருகிறது. நாளை மறுநாள் (22-ந்தேதி) முதல் 2 நாட்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுகிறார்கள்.

    பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் இந்த குழுவினர் அழைத்து செல்லப்படுவார்கள். அனைத்து பகுதிகளிலும் விவசாயிகளை சந்திக்க ஏற்பாடு செய்யும்படி கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    விவசாயிகள், எம்.பி, எம்.எல்.ஏக்கள் சேதவிபரங்களை எடுத்து சொல்ல வேண்டும். மத்திய குழுவினர் 24-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திப்பார்கள்.

    ஏற்கனவே மத்திய அரசிடம் முதல் கட்டமாக 2,629 கோடி நிவாரண நிதி கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

    வெள்ளப்பெருக்கு


    தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், அண்டை மாநிலங்களில் மழை பெய்து வருவதாலும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

    விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து புதிதாக பாதிப்பு விவரங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

    எனவே மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிவாரண நிதி கேட்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    ×